திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப திருவிழா


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப திருவிழா
x
தினத்தந்தி 25 Feb 2018 10:15 PM GMT (Updated: 25 Feb 2018 8:41 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப திருவிழா நேற்று மாலை கோலாகலமாக தொடங்கியது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப திருவிழா நேற்று மாலை கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி கோவிலில் இருந்து சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தேரில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து தெப்ப உற்சவத்தின் 2–வது நாளான இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஸ்ரீகிருஷ்ணர்–ருக்மணி, ஏழுமலையான் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நான்கு மாட வீதிகளின் வழியாக புஷ்கரணிக்கு சென்று தெப்பத்தில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

தெப்ப திருவிழாவின் நிறைவு நாளான மார்ச் மாதம் 1–ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.


Next Story