தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்பான வழக்குகள் அதிகரிப்பு + "||" + Increase in federal government cases in Supreme Court

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்பான வழக்குகள் அதிகரிப்பு

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்பான வழக்குகள் அதிகரிப்பு
மத்திய அரசின் கொள்கைகளை முன்வைத்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் அவ்வப்போது வழக்குகள் பதிவு செய்கின்றனர்.

புதுடெல்லி,

மத்திய அரசையும் ஒரு தரப்பாக சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

அந்தவகையில் கடந்த 2017–ம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31–ந்தேதி வரை 4,229 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆண்டிலும் கடந்த 22–ந்தேதி வரை 859 வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. இது முந்தைய 2016–ம் ஆண்டில் 3,497 ஆக இருந்தது.

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்ற அரசின் கொள்கைகளே இத்தகைய வழக்கு அதிகரிப்புக்கு காரணம் என சட்ட அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இவ்வாறு மத்திய அரசு தொடர்புடைய வழக்குகள் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் இந்த வழக்குகளுக்கு அரசு சார்பில் ஆஜராகும் சட்ட வல்லுனர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.