தேசிய செய்திகள்

ரெயில்வே போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை + "||" + Railway police officer shot dead

ரெயில்வே போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

ரெயில்வே போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை
மேகாலயாவில் ரெயில்வே போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சில்லாங்,

மேகாலயா மாநிலம் சில்லாங் மாவட்டத்தில், வங்காளதேச நாட்டின் எல்லையையொட்டி உள்ள மவ்கிராவத் என்கிற நகரில் ரெயில்வே பாதுகாப்பு படையினரின் முகாம் உள்ளது.

இங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீஸ் உதவி கமி‌ஷனர் முகேஷ் தியாகி என்பவரை சக போலீஸ்காரரான அர்ஜின் தெஸ்வால் துப்பாக்கியால் சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் இன்ஸ்பெக்டர் பிரதீப் மீனா, சப்–இன்ஸ்பெக்டர் ஓம் பிரகாஷ் யாதவ், மற்றொரு போலீஸ்காரர் ஜோகிந்த் குமார் ஆகியோரும் காயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய அர்ஜின் தெஸ்வாலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.