தேசிய செய்திகள்

ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்தவர்கள் மீது ரெயில் என்ஜின் மோதி விபத்து; 6 பேர் பலி + "||" + 6 dead as train engine runs over them in Hapur

ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்தவர்கள் மீது ரெயில் என்ஜின் மோதி விபத்து; 6 பேர் பலி

ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்தவர்கள் மீது ரெயில் என்ஜின் மோதி விபத்து; 6 பேர் பலி
டெல்லியில் இருந்து மொரதாபாத் செல்லும் ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து இருந்தவர்கள் மீது ரெயில் என்ஜின் மோதி 6 பேர் பலியாகினர்.

ஹாபூர்,

உத்தர பிரதேசத்தில் காஜியாபாத் நகரில் இருந்து ஹாபூர் நோக்கி ரெயில் என்ஜின் ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது.  அது நேற்று நள்ளிரவு டெல்லியில் இருந்து மொரதாபாத் செல்லும் ரெயில் தண்டவாளம் வழியே வந்து கொண்டிருந்தது.  அது, பில்குவா ரெயில் நிலையம் அருகே வந்தபொழுது அங்கிருந்த தண்டவாளத்தில் அமர்ந்து இருந்த சிலர் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  அவர்கள் ஆரிப், சலீம், சமீர், விஜய் மற்றும் ஆகாஷ் என தெரிய வந்துள்ளது.  இவர்களுடன் இருந்த ராகுல் மற்றும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  அவர்களில் ராகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.  சிகிச்சை பெறும் மற்றொருவர் நிலைமை சீராக உள்ளது.