இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் இந்துதான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்


இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் இந்துதான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
x
தினத்தந்தி 26 Feb 2018 7:14 AM GMT (Updated: 26 Feb 2018 7:16 AM GMT)

மீராட்டில் நடந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடையே பேசிய அதன் தலைவர் மோகன் பகவத் இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் இந்துதான் என கூறினார். #MohanBhagwat

மீரட்

மீரட் நகரில் ஆர்.எஸ்.எஸ்சால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மாநாடு நடைபெற்றது. உ.பி. மற்றும் உத்தரகாண்ட் பல பகுதிகளிலிருந்து பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல அரசியல் தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு இந்துவும் எனது சொந்த சகோதரர்.  இந்தியாவில் வெவ்வேறு உணவு பழக்க வழக்கங்கள் உள்ளன. வெவ்வேறு கடவுள்களை வணங்குகிறார்கள்.வெவ்வேறு   தத்துவம் , மொழி மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றலாம்., ஆனால் அவர்கள் அனைவரும் இந்துக்கள். ஆனால் அதைபற்றி அவர்களுக்கு தெரியவில்லை.  பாரத மாதாவை அவரது சொந்த தாய் என கருதுபவர்கள் மட்டுமே உண்மையான இந்துக்கள்.

எல்லோரும் பன்முகத்தன்மையைப் பார்க்கிறார்கள், ஆனால் இது உண்மையிலேயே  பன்முகத்தன்மை ஒற்றுமை என்று அவர் கூறினார்.

'இந்துத்துவா' என்பது மதச்சார்பின்மை அகிம்சை மற்றும்  பெருந்தன்மை என்று பொருள்.  

இந்துக்களை  நாம் ஒன்றிணைக்க வேண்டும். ஏனென்றால் பண்டைய காலங்களிலிருந்து இது நம் வீடுதான், நாம் இந்த நாட்டிற்கு கடமைப்பட்டிருக்கிறோம். "என கூறினார்

Next Story