உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ருஸ்டம்-2 ஆளில்லா விமானம் சோதனை வெற்றி


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ருஸ்டம்-2 ஆளில்லா விமானம் சோதனை வெற்றி
x
தினத்தந்தி 26 Feb 2018 8:27 AM GMT (Updated: 26 Feb 2018 8:27 AM GMT)

இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ருஸ்டம் 2 என்னும் ஆளில்லா விமானத்தின் சோதனை சித்ரதுர்காவில் வெற்றிகரமாக முடிந்தது. #Rustom2 #DRDO

கர்நாடகா,

இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி ஆர் டி ஒ) சார்பில் தயாரிக்கப்பட்ட ருஸ்டம் 2 என்னும் கனரக ஆளில்லா விமானத்தின் சோதனை, கர்நாடகாவின் சித்ரதுர்கா என்னுமிடத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஆளில்லா விமானங்களுக்கு இணையான திறன்களை பெற்றது.

நடுத்தர உயரத்தில், நீண்ட நேரம் பறக்கும் திறன் வாய்ந்த ருஸ்டம்-2 விமானம் அமெரிக்காவின் பிரிடேட்டர் ஆளில்லா விமானத்துக்கு சமமான தரத்தை பெற்றது. இந்த விமானம் எதிரிகளின் இடங்களை கண்காணிப்பதுடன், ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறனும் மிக்கதாகும். மேலும் 24 மணி நேரமும் ஒரே கட்டமாக பறக்கும் திறன் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தின் சோதனை நிகழ்வினை டி ஆர் ஓ டி தலைவர்  கிறிஸ்டோபர் உள்பட பல அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு 1500 கோடியில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story