தேசிய செய்திகள்

நிரவ் மோடியின் வெளிநாட்டு தொழில், சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க அமலாக்கப்பிரிவு எல்ஆர்எஸ் நாடுகிறது + "||" + ED seeks LRs to probe Nirav Modi s overseas biz and assets

நிரவ் மோடியின் வெளிநாட்டு தொழில், சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க அமலாக்கப்பிரிவு எல்ஆர்எஸ் நாடுகிறது

நிரவ் மோடியின் வெளிநாட்டு தொழில், சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க அமலாக்கப்பிரிவு எல்ஆர்எஸ் நாடுகிறது
நிரவ் மோடியின் வெளிநாட்டு தொழில் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க அமலாக்கப்பிரிவு எல்ஆர்எஸ் நாடுகிறது. #NiravModi #PNBfraud

மும்பை,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11,000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றது தொடர்பாக விசாரித்து வரும் அமலாக்கப்பிரிவு, நிரவ் மோடியின் வெளிநாட்டு தொழில்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு எல்ஆர்எஸ் (லட்டர்ஸ் ரோகடோரி) விட கோர்ட்டை நாடிஉள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) எல்ஆர்எஸ் வெளியிட அமலக்கப்பிரிவு கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விசாரணையின் தொடர்பாக ஹாங்காங், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரெட்ஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஆவணங்கள் சேகரிப்புக்கு எல்ஆர்எஸ் வெளியிட அமலாக்கப்பிரிவு தரப்பில் பிஎம்எல்ஏ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் தனிநபர் ஒருவர் மேற்கொள்ளும் தொழில்கள் மற்றும் அவருடைய சொத்துக்கள் தொடர்பான தகவல்களை பெற கோர்ட்டின் லட்டர்ஸ் ரோகடோரி பெறுவது என்பது அவசியமானது. 

டைமண்ட் ஆர் யுஎஸ், சோலார் எக்ஸ்போர்ட், ஸ்டெல்லர் டைமண்ட், பிரெஸ்டர் டைமண்ட் உள்பட வைரம் வாங்குதல், பட்டைத் தீட்டுதல் மற்றும் ஆபரண தயாரிப்பு என்ற நிலைகள் அடிப்படையில் நிரவ் மோடி பல்வேறு தொழில்களை தொடங்கி உள்ளார். நிரவ் மோடியின் வணிகம் உலகம் முழுவதும் அதிகமான நாடுகளில் பரவி உள்ளது. ஹாங்காங், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரெட்ஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூர் உள்பட பல நாடுகளில் அவருடைய வணிகம் பரவி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து நிரவ் மோடியின் நிறுவனத்துக்கு வங்கிகள் அளிக்கும் உறுதியளிப்பு கடிதம் (எல்ஒயூ) வழங்கப்பட்டு உள்ளது. 

மோசடியான முறையில் எல்ஒயூ விடுக்கப்பட்டு உள்ளது என அமலாக்கப்பிரிவு தரப்பில் கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.