தேசிய செய்திகள்

ஸ்ரீதேவிக்கு கடினமான மது வகைகளை அருந்தும் பழக்கம் கிடையாது - அமர் சிங் + "||" + Sridevi ji did not drink hard liquor,she used to have wine sometimes Amar Singh

ஸ்ரீதேவிக்கு கடினமான மது வகைகளை அருந்தும் பழக்கம் கிடையாது - அமர் சிங்

ஸ்ரீதேவிக்கு கடினமான மது வகைகளை அருந்தும் பழக்கம் கிடையாது - அமர் சிங்
ஸ்ரீதேவிக்கு கடினமான மது வகைகளை அருந்தும் பழக்கம் கிடையாது என அமர்சிங் கூறிஉள்ளார். #Sridevi


புதுடெல்லி,

 துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடற்கூறு அறிக்கையில், நீரில் மூழ்கிய விபத்து என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரத்தத்தில் ஆல்கஹால் இருந்ததாகவும் அறியப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மாநிலங்களவை எம்.பி. அமர் சிங் பேசுகையில், ஸ்ரீதேவிக்கு கடினமான மது வகைகளை அருந்தும் பழக்கம் கிடையாது. பொதுவாழ்க்கையில் சில நேரங்களில் என்னைபோன்றும், பிறரை போன்றும் ஒயின் அருந்துவார். அபுதாபி செயிக் அல் நாக்யானிடம் பேசிஉள்ளேன், அனைத்து வழிமுறைகளும், அறிக்கைகளும் முடிந்துவிட்டது என உறுதியளித்து உள்ளார். நள்ளிரவிற்குள் ஸ்ரீதேவியின் சடலம் இந்தியாவிற்கு கொண்டுவரும் என கொண்டுவரப்படும் என கூறிஉள்ளார்.