காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே கூடாது தேவேகவுடா வலியுறுத்தல்


காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே கூடாது தேவேகவுடா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Feb 2018 2:12 PM GMT (Updated: 26 Feb 2018 2:12 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே கூடாது என்று தேவேகவுடா வலியுறுத்தி உள்ளார். #Cauveryverdict


பெங்களூரு,  

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கர்நாடகத்திற்கு பிரச்சினை தான் என முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா கூறிஉள்ளார். 

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவேகவுடா, காவிரி தீர்ப்பில் கர்நாடகத்திற்கு என்ன நன்மை கிடைத்துள்ளது, எதற்காக இனிப்பு வழங்கி கொண்டாடினர் என்று தெரியவில்லை என கூறிஉள்ளார். 
   
தமிழ்நாட்டில் மேல்முறையீடு செய்ய அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்துகின்றன. ஆட்சேபனைகளை தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு 6 வாரங்கள் காலஅவகாசம் கொடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழ்நாடு எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால் அந்த வாரியம் அமைக்கப்பட்டால், கர்நாடகத்திற்கு ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் பணியை மாநில அரசு செய்யவில்லை. இந்த வி‌ஷயத்தில் மாநில அரசு அலட்சியமாக இருப்பது சரியல்ல. நமது சட்ட நிபுணர்களுடன் மாநில அரசு இன்னும் விவாதிக்கவில்லை.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கர்நாடகத்திற்கு பிரச்சினை தான். நமது மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை. நமக்கு கூடுதலாக 40 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் 14.75 டி.எம்.சி. தான் நமக்கு கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை எக்காரணம் கொண்டும் அமைக்கவே கூடாது. இதுபற்றி மத்திய மந்திரி அனந்தகுமாருடன் நான் ஆலோசனை நடத்தினேன். இந்த வி‌ஷயத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பி உள்ளார் தேவேகவுடா. 

Next Story