பீகாரில் தடையை மீறி மது விற்பனை-மது குடித்தவர்கள் மீது நடவடிக்கை


பீகாரில்  தடையை மீறி மது விற்பனை-மது குடித்தவர்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 8 March 2018 7:13 PM GMT (Updated: 8 March 2018 7:13 PM GMT)

பீகாரில் தடையை மீறி விற்பனை செய்தல் மற்றும் மதுவை குடித்தவர்கள் சுமார் 1.21 இலட்சம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பட்னா, 

பீகாரில்  தடையை மீறி மது விற்றதாக 1.21 இலட்சம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆல்கஹாகால் உபயோகித்தல் மற்றும் விற்பனை செய்தவைக்காக தடையை மீறியதாக 1.21 லட்சம் மக்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். மார்ச் 6, 2018 மற்றும் ஏப்ரல் 1, 2016 இடைவெளிகளில் நடத்தப்பட்ட 6.5 லட்சம் சோதனைகளில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு மில்லியன் லிட்டர் அளவுக்கு அதிகமான கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது என மாநில அரசு தெரிவித்துள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக 8.23 லட்சம் லிட்டர் அளவுக்கு மது உபயோகபடுத்த பட்டிருப்பதாகவும் இந்த காலகட்டத்தில் வெளிநாட்டு மதுபானத்தின் அளவு 16.4 லட்சம் லிட்டர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 5, 2016 முதல் மாநிலத்தில் ஆல்ஹகால் விற்பனை மற்றும் உபயோகபடுத்துவதற்கு தடை என்ற முழுமையான அறிவிப்பை நிதிஷ்குமார் அரசு வெளியிட்டது என்பது குறிப்பிடதக்கது.

Next Story