தேசிய செய்திகள்

அயோத்தி பிரச்சினையில் சர்ச்சை கருத்து ஸ்ரீ ரவிசங்கர் மீது வழக்கு பதிவு + "||" + Controversia sobre el problema de Ayodhya Caso archivado contra Sri Ravi Shankar

அயோத்தி பிரச்சினையில் சர்ச்சை கருத்து ஸ்ரீ ரவிசங்கர் மீது வழக்கு பதிவு

அயோத்தி பிரச்சினையில் சர்ச்சை கருத்து ஸ்ரீ ரவிசங்கர் மீது வழக்கு பதிவு
பிரபல ஆன்மிகவாதியும், ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ரவிசங்கர், அயோத்தி பிரச்சினையில் கோர்ட்டுக்கு வெளியே சமரச தீர்வு ஏற்படுத்த முயன்று வருகிறார்.

ஐதராபாத்,

ஸ்ரீ ரவிசங்கர்  சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘அயோத்தி கோவிலுக்கு எதிராக கோர்ட்டு தீர்ப்பு அளித்தால், நாடு முழுவதும் ரத்தக்களரி ஏற்படும். சிரியா போன்ற நிலைமை உருவாகி விடும்’’ என்று கூறினார்.

இதை எதிர்த்து அவர் மீது ஐதராபாத்தில் உள்ள மொகல்புரா போலீஸ் நிலையத்தில் சலாகுதின் அபான் என்பவர் புகார் செய்தார். அதில், ரவிசங்கர், முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவதாகவும் அவர் கூறி இருந்தார்.

இதன் அடிப்படையில், ஸ்ரீ ரவிசங்கர் மீது மொகல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.