சிறையில் செல்பி எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்ட விசாரணைக்கைதிகள்


சிறையில் செல்பி எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்ட விசாரணைக்கைதிகள்
x
தினத்தந்தி 11 March 2018 6:44 AM GMT (Updated: 11 March 2018 6:44 AM GMT)

உத்தரபிரதேச மாநிலத்தில் விசாரணை கைதிகள் மூன்று பேர் சிறை வளாகத்தினுள் செல்பி எடுத்து அதனை பேஸ்புக்கில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முசாபர்நகர்,

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரின் மாவட்ட சிறையிலிருக்கும் விசாரணை கைதிகள் மூன்று பேர் சிறை வளாகத்தினுள் செல்பி எடுத்து அதனை பேஸ்புக்கில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ”
முசாபர்நக
ரின் மாவட்ட சிறையில் இருக்கும் 3 விசாரணை கைதிகள், ஸ்மார்ட்போனை உபயோகித்துள்ளனர். மேலும் சிறை வளாகத்தினுள்ளேயே செல்பி எடுத்து அதனை பேஸ்புக்கில் பதிவும் செய்துள்ளனர். இதனிடையே அவர்களிடமிருந்து ஸ்மார்ட்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறோம். மேலும் மாவட்ட நீதிபதி இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று விசாரணை கைதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்” என கூறினர்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேர் மீதும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளதாக சிறைக்கண்காணிப்பாளர் கூறியுள்ளார். முன்னதாக சில நாட்களுக்கு முன், வழக்கறிஞர் ஒருவர் சிறையிலிருக்கும் கைதியுடன் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசிய காரணத்தினால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story