சேமிப்பு கணக்கில் இருப்பு குறைவுக்கான அபராத தொகையை குறைத்தது எஸ்.பி.ஐ வங்கி


சேமிப்பு கணக்கில் இருப்பு குறைவுக்கான அபராத தொகையை குறைத்தது எஸ்.பி.ஐ வங்கி
x
தினத்தந்தி 13 March 2018 5:56 AM GMT (Updated: 13 March 2018 5:56 AM GMT)

சேமிப்பு கணக்கில் இருப்பு குறைவுக்கான அபராத தொகையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறைத்துள்ளது. #SBI

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் சில இணைக்கப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து, அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சுமார் 37 கோடியாக அதிகரித்து இருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ  தனது வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸ் என்னும் குறைந்த பட்ச இருப்புத்தொகையை கணக்கில் வைத்திருக்க வேண்டும் கடந்த ஆண்டு  புதிய விதிமுறைகளை வெளியிட்டது. 

நகரங்கள், நடுத்தர நகரங்கள், புறநகரங்கள்  என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு  மூன்று விதமான குறைந்த பட்ச இருப்புத்தொகையை எஸ்.பி.ஐ நிர்ணையித்து இருந்தது. ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை இந்த அறிவிப்பு ஏற்படுத்தியது. கடும் எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து, நகரங்களில் குறைந்த பட்ச இருப்புத்தொகையானது 5 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக குறைக்கப்பட்டது. 

இந்த நிலையில்,குறைந்த பட்ச இருப்புத்தொகை பராமரிக்காத வங்கிகணக்குகளுக்கு   விதிக்கப்பட்ட அபராத தொகையை எஸ்.பி.ஐ வங்கி 75 சதவீதம் குறைத்துள்ளது. அதாவது, நகரப்பகுதிகளில் குறைந்த பட்ச இருப்புத்தொகை வைத்திருக்காவிட்டால் ரூ. 50 அபராதம் அதனுடன் ஜி.எஸ்.டி கட்டணம் ரூ.15 என மொத்தம் ரூ.65 வசூலிக்கப்படும்.

 அதேபோல், நடுத்தர நகர வங்கி மற்றும் புறநகர் வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் குறைந்த பட்ச இருப்புத்தொகை பராமரிக்காவிட்டால் ரூ.40 அபராதம் ஜி.எஸ்.டி 12 மற்றும் ரூ.10 முறையே கணக்கிட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. 

Next Story