அணு ஆயுத பரவல் தடுப்பு விவகாரத்தை இந்தியா மிகவும் தீவிரமாக எடுத்துள்ளது: நிர்மலா சீதாராமன்


அணு ஆயுத பரவல் தடுப்பு விவகாரத்தை இந்தியா மிகவும் தீவிரமாக எடுத்துள்ளது: நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 16 March 2018 6:03 AM GMT (Updated: 16 March 2018 6:03 AM GMT)

அணு ஆயுத பரவல் தடுப்பு விவகாரத்தை இந்தியா மிகவும் தீவிரமாக எடுத்து செயலாற்றுகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman

புதுடெல்லி,

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்ற போதிலும் அணு ஆயுத பரவல் தடுப்பு விவகாரத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டு செயலாற்றுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நேற்று டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- “ அணு ஆயுத பரவலை கட்டுப்படுத்தும் அர்ப்பணிப்புடனே நாங்கள் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம். சட்ட விரோத ஆயுத பரவலுக்கு நாங்கள் ஆதரவாக இல்லை. பிற அண்டை நாடுகளை போல வெடிகுண்டுகளை நாம் நம்பிக்கொண்டிருக்கவில்லை. அணு ஆயுதல் பரவல் தடை என்பதை இந்தியா மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.  

பாகிஸ்தானுடனான எல்லைப்பகுதியில் அத்துமீறல் குறைந்தபாடில்லை. நாங்கள் மிகவும் விழிப்புடனே இருக்கிறோம். ஊடுருவலை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். எல்லை ஊடுருவல் விவகாரத்தை பொருத்தவரை  மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றி வருகிறது. தங்கள் மண் பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story