தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற தெலுங்கு தேசம் முடிவு மம்தா பானர்ஜி வரவேற்பு


தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற தெலுங்கு தேசம் முடிவு மம்தா பானர்ஜி வரவேற்பு
x
தினத்தந்தி 16 March 2018 6:09 AM GMT (Updated: 16 March 2018 6:09 AM GMT)

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளதற்கு மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்து உள்ளார். #MamataBanerjee #ChandrababuNaidu

புதுடெல்லி

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக  ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.இது போல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள தனது கட்சி எம்.பிக்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று இரவு ஆலோசனை நடத்திய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, இன்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கொண்டு வரும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்குமாறு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவையில் 16 எம்.பிக்களும் மாநிலங்களவையில் 6 எம்.பிக்களும் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஏமாற்றுவதுதான் பாஜக என தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் விமர்சனம் செய்து உள்ளனர்.வரும் திங்களன்று மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என  டெல்லியில் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் ரமேஷ், தோட்டா நரசிம்மன், ரவீந்திர பாபு பேட்டி அளித்தனர்.

இது போல் இந்த தீர்மானத்தை தேவைப்பட்டால் ஆதரிப்போம் என்று தெலுங்கு தேசம் மற்றும் ராஷ்டிர ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூறியுள்ளது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகும் முடிவுக்கு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
நாட்டை பேரழிவிலிருந்து பாதுகாக்கவே இந்த எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய சூழலில் நாட்டை பேரழிவில் இருந்து காக்கும் வகையில் தெலுங்குதேசம் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.

எதிர்த்தரப்பிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அட்டூழியங்கள், பொருளாதாரப் பேரழிவு மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை ஆகியவற்றிற்காக நெருக்கமாக இணைந்து பணியாற்ற நான் வேண்டுகோள் விடுகிறேன் என கூறி உள்ளார்.


Next Story