ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பக்வந்த் மான் திடீர் விலகல்


ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பக்வந்த் மான் திடீர் விலகல்
x
தினத்தந்தி 16 March 2018 7:24 AM GMT (Updated: 16 March 2018 7:24 AM GMT)

ஆத் ஆத்மி கட்சியில் இருந்து பக்வந்த் மான் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பிக்ரம் சிங் மஜிதியா இவர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், போதை மருந்து கடத்திலில் ஈடுபட்டுள்ளதாகவும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.  

இந்தநிலையில் கெஜ்ரிவால் மீது பிக்ரம் சிங் மஜிதியா அமிரிதஸர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். தான் கூறிய கருத்துக்கள் ஆதாரமில்லாமல் கூறப்பட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து பிக்ரம் சிங் மஜிதியா இது குறித்து மனிப்பு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து கெஜ்ரிவால் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை மஜிதியா வாபஸ் பெற்றுகொள்வதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பக்வந்த் மான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நான் பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.  ஆம் ஆத்மியில் இருந்து பஞ்சாபில் போதை மருந்து கடத்தலுக்கும், மாபியா கும்பலுக்கும் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story