மணமகன் தாடியால் தாமதமான திருமணம்


மணமகன் தாடியால் தாமதமான திருமணம்
x
தினத்தந்தி 17 March 2018 5:37 AM GMT (Updated: 17 March 2018 5:37 AM GMT)

மணமகன் தாடியை எடுத்துவிட்டு வந்தால் தான் திருமணம் செய்து வைப்போம் என பெண் வீட்டார் கூறிய சம்பவம் நடந்துள்ளது.


போபால்

மத்திய பிரதேசம் மாநிலம் கந்தவா பகுதியில் மங்கல் சவுகான் என்பவருக்கும், ரூபாலி என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தது. முகூர்த்த நேரத்தில், மணமகன் தாடி வைத்து கொண்டு ஸ்டைலாக வந்து உள்ளார். ஆனால் மணமகள் வீட்டாருக்கு  மணமகனின் தாடி பிடிக்கவில்லை . இதனால்  தாடியை எடுத்துவிட்டு வந்தால் தான் பெண்ணை திருமணம் செய்து வைப்போம் என மணமகள் வீட்டார் கூறியுள்ளனர். 

ஆனால், சவுகான்கான் தாடியை எடுக்க மறுப்பு தெரிவித்து பிடிவாதம் பிடித்துள்ளார். இதனால் 12 மணிநேரம் திருமணம் பாதிக்கப்பட்ட நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் மணமகனை சமாதானப்படுத்தி, தாடியை எடுக்க வைத்தனர். அதன் பின்னர், மணமகள் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவே திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

Next Story