தேசிய செய்திகள்

நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாக இணைப்பதே காங்கிரஸின் ஒரே நோக்கம் ராகுல்காந்தி பேச்சு + "||" + This is the only symbol (Congress party symbol) that can unite the nation and take it forward Rahul Gandhi at Congress Plenary Session in Delhi

நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாக இணைப்பதே காங்கிரஸின் ஒரே நோக்கம் ராகுல்காந்தி பேச்சு

நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாக இணைப்பதே காங்கிரஸின் ஒரே நோக்கம் ராகுல்காந்தி பேச்சு
நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாக இணைப்பதே காங்கிரஸின் ஒரே நோக்கம் என டெல்லி மாநாட்டில் ராகுல்காந்தி பேசினார். #RahulGandhi #BJP
புதுடெல்லி,

டெல்லியில் இந்திரா காந்தி மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாடு நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,

நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாக இணைப்பதே காங்கிரஸின் ஒரே நோக்கம். கை சின்னம் ஒன்றே, அனைவரையும் ஒன்றிணைத்து முன்னெடுத்து செல்லும். ஆட்சியாளர்களால் நாட்டு மக்கள் துண்டாடப்படுகிறார்கள்.

நாட்டு மக்களிடையே வெறுப்பு உணர்வை ஆட்சியில் இருப்பவர்கள் பரப்பி வருகின்றனர். நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதும் நமது கடமை. நாடு அனைவருக்கும் சொந்தமானது. மக்களின் நன்மைக்காகவே காங்கிரஸ் பாடுபடும்.

மக்களின் கோபத்தை பாஜக பயன்படுத்துகையில் காங்கிரஸ் அன்பை பயன்படுத்திகிறது.கட்சியின் மூத்த, இளம் தலைவர்களை இணைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளேன். 

முன்னேற விரும்பும் நாட்டுக்கும் வழிகாட்ட காங்கிரசால் மட்டுமே முடியும் என ராகுல் காந்தி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. புயல் பாதிப்புகளை பார்வையிட ராகுல்காந்தி வருவார் - திருநாவுக்கரசர் தகவல்
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட ராகுல்காந்தி வருவார் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
2. நாட்டை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைந்து செயல்பட முடிவு - ராகுல்காந்தி
நாட்டை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
3. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் : ராகுல் காந்தி கருத்து
சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
4. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யக் கோரி முதல்வர் மகன் மனு
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யக் கோரி மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேய சவுகான் புகார் அளித்துள்ளார்.
5. ராகுல்காந்தி பிரசாரத்தில் பலூன் வெடித்த சம்பவம்: மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவு
ராகுல்காந்தி பிரசாரத்தின் போது, பலூன் வெடித்து தீ பற்றிய சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.