அதிமுக எம்.பிக்கள் ஆதரவு தர மறுத்துவிட்டனர்: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி வரபிரசாத ராவ் தகவல்


அதிமுக எம்.பிக்கள் ஆதரவு தர மறுத்துவிட்டனர்: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி வரபிரசாத ராவ் தகவல்
x
தினத்தந்தி 19 March 2018 8:41 AM GMT (Updated: 19 March 2018 8:41 AM GMT)

அதிமுக எம்.பிக்கள் ஆதரவு தர மறுத்துவிட்டனர் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி வரபிரசாத ராவ் தெரிவித்துள்ளார். #BudgetSession

புதுடெல்லி,

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரச்சினையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அண்மையில் விலகிய தெலுங்கு தேசம், மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக அறிவித்தது. தெலுங்கு தேசத்துடன் இணைந்து, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தது. 

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் அமளியால்  நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதால், நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று அறிமுகப்படுத்தப்படவில்லை. 

இந்த நிலையில், அதிமுக எம்.பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தர மறுத்துவிட்டனர் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த  எம்.பி வரப்பிரசாத ராவ் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டி அளித்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி வரப்பிரசாத ராவ் மேலும் கூறும் போது, “  அதிமுக எம்.பிக்களை நேரில் அணுகி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டோம். ஆனால், அதிமுக எம்.பிக்கள் ஆதரவு தர மறுத்து விட்டனர்” என்றார்.

Next Story