பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. சுமையால் சிவசேனா கட்சியை சேர்ந்தவர் தற்கொலை: ராதாகிருஷ்ண பட்டீல்


பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. சுமையால் சிவசேனா கட்சியை சேர்ந்தவர் தற்கொலை:  ராதாகிருஷ்ண பட்டீல்
x
தினத்தந்தி 19 March 2018 11:04 AM GMT (Updated: 19 March 2018 11:15 AM GMT)

பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரிச்சுமையால் சிவசேனா கட்சியை சேர்ந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக மகாராஷ்ட்ர சட்டசபையின் எதிர்க்கட்சித்தலைவர் ராதாகிருஷ்ண பட்டீல் கூறியுள்ளார். #ShivSena #VikhePatil

மும்பை, 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ராதாகிருஷ்ண பட்டீல்
இவர் மகாராஷ்டிர சட்டசபையில் இன்று பேசும்பொழுது, ”கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி சடாரா மாவட்டத்தின் கரட் தெஹில் பகுதியில் வசிக்கும் ராகுல் பாலேகி என்னும் சிவசேனா கட்சியை சேர்ந்த தொழிலாளி பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரிச்சுமையால் தற்கொலை செய்துள்ளார்.

பெரும்பாலான கட்சிகள் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மக்களவையில் ஆதரவு அளித்த நிலையில் சிவசேனா கட்சியினர் ஆதரவு தெரிவிக்கவில்லை. தனது கட்சியை சேர்ந்த தொழிலாளி பாஜக அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் தற்கொலை செய்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி பரவலாக வலம் வந்த நிலையிலும் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சி இன்னும் ஏன் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அளிக்கிறது” என கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த சுனில் பிரபு இதற்கு பதிலளிக்கும் விதமாக, ”மத்திய அரசுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. பீகார் மாநிலம் பல காலமாக சிறப்பு அந்தஸ்து கோரி வருகிறது.

அதே போல் தற்போது ஆந்திர மாநிலமும் சிறப்பு அந்தஸ்து பெற மத்திய அரசிடம் குரல் கொடுத்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு மாநிலத்திற்காக சிவசேனா கட்சி தனது ஆதரவை எப்போதும் தெரிவிக்காது. இதனால் தெலுங்கு தேசம் கட்சி தலைமையில் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் முன்மொழியப்பட்டால் சிவசேனா கட்சி ஆதரவு அளிக்காமல் ஒதுங்கியிருக்கும்” என கூறியுள்ளார்.

Next Story