சீன ஹேக்கர்கள் வாட்ஸ்-அப்பை இலக்காக்குகிறார்கள் இந்திய ராணுவம் எச்சரிக்கை


சீன ஹேக்கர்கள் வாட்ஸ்-அப்பை இலக்காக்குகிறார்கள் இந்திய ராணுவம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 March 2018 11:27 AM GMT (Updated: 19 March 2018 11:27 AM GMT)

சீன ஹேக்கர்கள் வாட்ஸ்-அப்பை இலக்காக்காக்குகிறார்கள் என இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. #WhatsApp #IndianArmy #ChineseHackers

பெங்களூரு,

இந்தியாவில் உள்ள பயனாளர்களை சீன ஹேக்கர்கள் வாட்ஸ்-அப் மூலமாக இலக்காக்குகிறார்கள் என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.

மக்கள் சமூக வலைதளமான வாட்ஸ்-அப் செயலியை மிகவும் பாதுகாப்புடன் கையாளும்படி இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ள வீடியோவில் கேடுக்கொண்டு உள்ளது. இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் காவல் பணியில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் வாட்ஸ்-அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என ராணுவம் எச்சரிக்கை விடுத்து 4 மாதங்கள் ஆன நிலையில் மக்களுக்கும் அதுபோன்ற எச்சரிக்கையானது விக்கப்பட்டு உள்ளது. 

சீன மொபைல்களை பயன்படுத்தும் ராணுவ அதிகாரிகள் சீனாவின் ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாக ஏற்கனவே கூறப்பட்டது.

“உங்கள் டிஜிட்டல் உலகத்தை ஊடுருவிப் பார்க்க சீனா அனைத்துவிதமான சாத்தியத்தையும் பயன்படுத்துகிறது. உங்களுடைய சிஸ்டத்தை ஹேக்கிங் செய்ய இப்போது வாட்ஸ் அப் குரூப்பை பயன்படுத்துகிறது. உங்களுடைய குரூப்களில் +86 சீன எண்களுடன் ஊடுருவும் சீன ஹேக்கர்கள் உங்களுடைய தரவுகளை திருட தொடங்குகிறார்கள்,” என இந்திய ராணுவத்தின் ஏடிஜிபிஐ டுவிட்டர் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. +86 சீன எண்கள் உங்களுடைய குரூப்களில் ஊடுருவி உள்ளனவா என்பதை நீங்கள் தொடர்ந்து கண்காணித்து வாருங்கள் எனவும் ராணுவம் எச்சரிக்கை செய்தியில் குறிப்பிட்டு உள்ளது. உங்களுடைய  ‘சிம்’மை மாற்றினால், அதனை முற்றிலுமாக சிதைத்துவிடுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story