சாலை ஒப்பந்தகாரர் கொலை, கட்டுமான வாகனங்களுக்கு தீ வைப்பு; நக்சல்கள் அட்டுழியம்


சாலை ஒப்பந்தகாரர் கொலை, கட்டுமான வாகனங்களுக்கு தீ வைப்பு; நக்சல்கள் அட்டுழியம்
x
தினத்தந்தி 19 March 2018 12:25 PM GMT (Updated: 19 March 2018 12:25 PM GMT)

சத்தீஸ்கர் மாநிலம் பிஜபூர் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தகாரரை கொன்று அங்குள்ள சாலை கட்டுமான வாகனங்களுக்கு நக்சல்கள் தீ வைத்து எரித்துள்ளனர். #NaxalsAttack

ராய்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் பிஜபூர் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தகாரரை கொன்று அங்குள்ள சாலை கட்டுமான வாகனங்களுக்கு நக்சல்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து துணை 
ஆய்வாளர் 
சுந்தர்ராஜ் கூறுகையில், "பிரதமர் மோடியின் கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் பிஜபூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் டும்னர் மற்றும் கோஇட்பால் கிராமங்களுக்கு இடையே சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலைகள் அமைக்கப்படும் பகுதிக்கு வந்த நக்சல்கள் பணியை உடனடியாக நிறுத்தும்படி தொழிலாளர்களை மிரட்டியுள்ளனர்.

சாலை அமைக்க பயன்படும் 4 கட்டுமான வாகனங்களையும் தீ வைத்து எரித்த நக்சல்கள் மேலும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த விஷால் குமார் (36) என்னும் சாலை கட்டுமான ஒப்பந்தகாரரை கடத்தி காட்டுக்குள் சென்றுள்ளனர்.

இந்நிலையில், குமாரது தலைப்பகுதி கோடாரியால் வெட்டப்பட்டு சிதைந்த நிலையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்ற  இடத்திற்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் நக்சல்கள் தாக்குதல் குறித்த தகவலை பெற்ற உடனேயே விரைந்து வந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக பிஜபூர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட நக்சல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என கூறினார்.

Next Story