ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து


ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து
x
தினத்தந்தி 19 March 2018 1:57 PM GMT (Updated: 19 March 2018 1:57 PM GMT)

ரஷிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். #PMModi #VladimirPutin


புதுடெல்லி,


ரஷிய அதிபர் தேர்தலில் புதின் அமோக வெற்றி பெற்றார். தேர்தலில் பதிவான வாக்குகளில் 76.67 சதவீத ஓட்டுகளைப் பெற்று அவர் அமோக வெற்றி கண்டார். இந்த தேர்தலில் பெருமளவில் தில்லுமுல்லு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இந்த வெற்றியின் மூலம் 2024–ம் ஆண்டு வரை ரஷியாவில் புதின் ஆதிக்கம் செலுத்த முடியும். ரஷிய அதிபராக பதவி வகித்த பிரபல தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்து அதிக ஆண்டுகள் நாட்டின் அதிகாரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள தலைவர் புதின்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார் என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.


Next Story