லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம்; கர்நாடகத்தில் வீரசைவ–லிங்காயத் சமூகம் இடையே மோதல்


லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம்; கர்நாடகத்தில் வீரசைவ–லிங்காயத் சமூகம் இடையே மோதல்
x
தினத்தந்தி 19 March 2018 2:20 PM GMT (Updated: 19 March 2018 2:20 PM GMT)

கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கப்பட்டதும் வீரசைவ–லிங்காயத் சமூகம் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. #Lingayat


பெங்களூரு, 


கர்நாடகத்தில் குறிப்பாக வட கர்நாடகத்தில் வீரசைவ–லிங்காயத் சமூக மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். வீரசைவ–லிங்காயத் சமூகம் ஒன்று கிடையாது என்றும், லிங்காயத் மற்றும் வீரசைவ சமூகம் தனித்தனியானது என்றும் அம்மாநில மந்திரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு லிங்காயத் சமூகத்தை சேர்ந்த மடாதிபதிகளில் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர். அதே நேரத்தில் வீரசைவ–லிங்காயத் சமூகத்தினர் ஒன்றே தான், இரு சமூகமும் வெவ்வேறானது கிடையாது என்றும் வீரசைவ சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் மற்றும் மடாதிபதிகள் வலியுறுத்தினர். 

மேலும் லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க கோரி அந்த சமூகத்தை சேர்ந்த மடாதிபதிகள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மாநாடுகளை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றினார். அவர்கள் தரப்பில் கோரிக்கை வலுத்தது.

 லிங்காயத் மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் தலைமையில் குழு அமைக்கப்பட்டு் ஆய்வு செய்யப்பட்டது. அந்த குழு லிங்காயத் சமூகத்தை தனிமதமாக அங்கீகரிக்கலாம் என்று பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரைகள் குறித்து கர்நாடக அமைச்சரவையில் இன்று ஒப்பதல் அளிக்கப்பட்டது. லிங்காயத்துக்களை தனி மதத்தினராக அங்கீகரிக்கப்பட்டது. இதற்கான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கர்நாடக மந்திரிசபையின் இந்த முடிவை லிங்காயத் மற்றும் வீரசைவ சமூகத்தை சேர்ந்த மந்திரிகள் வரவேற்றனர். இந்த முடிவை கேட்டு வட கர்நாடகத்தில் உள்ள லிங்காயத் சமூகத்தினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் கலபுராகியில் வீரசைவ–லிங்காயத் சமூகம் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது. லிங்காயத் சமூகத்தினர் கொண்டாடிய நிலையில் வீரசைவ சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் நேரிட்டு உள்ளது.


Next Story