தக்காளி காலிஃபிளவர் குறைந்த விலை போனதால் ஆத்திரம்: விளை நிலத்தில் இருந்த பயிர்களை அழித்த விவசாயி


தக்காளி காலிஃபிளவர் குறைந்த விலை போனதால் ஆத்திரம்: விளை நிலத்தில் இருந்த பயிர்களை அழித்த விவசாயி
x
தினத்தந்தி 21 March 2018 9:53 AM GMT (Updated: 21 March 2018 9:53 AM GMT)

மராட்டியத்தில் அறுவடை செய்த தக்காளி காலிஃபிளவர் குறைந்த விலை போனதால் ஆத்திரம் அடைந்த விவசாயி விளைநிலத்தில் இருந்த பயிர்களை அழித்துள்ளார். #cauliflower #farmer

மும்பை,

மராட்டிய மாநிலம் ஜால்னா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரேம் சிங் சவான். இவர் 40 ஆயிரம் செலவு செய்து காலிஃபிளவர் மற்றும் தக்காளி போன்றவற்றை பயிரிட்டுள்ளார். 

இந்தநிலையில் தக்காளி மற்றும் காலிஃபிளவர் வளர்ச்சி அடைந்தது. இவற்றை பெருமளவு பகுதியை அறுவடை செய்து அதனை விற்பனை சந்தைக்கு கொண்டு சென்று விற்றுள்ளார். அறுவடை செய்து அதனை  விற்றபோது வெறும் 4 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளது. 

காலிஃபிளவருக்கு வெறும் 420 ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் மன விரக்தி அடைந்த பிரேம் சிங் ஆத்திரத்தில் விளைநிலத்தில் அறுவடை செய்தது போக மீதி இருந்த காலிஃபிளவர் மற்றும் தக்காளிகளை செடியை  அழித்துள்ளார்.  

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். என் பண்ணையில் உள்ள  பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ளபோகிறேன் என விரக்தியுடன் கூறியுள்ளார்.

எங்கள் அரசு விவசாயிகளின் நிலைமையை கவனத்தில் கொண்டு வேளாண் விளைபொருட்களுக்கான விலையுயர்வு உறுதிசெய்யப்படும் என அம்மாநில முதல் மந்திரி சவான் சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story