தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி எந்த அளவிற்கும் செல்லும் : தேவ கவுடா


தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி எந்த அளவிற்கும் செல்லும் : தேவ கவுடா
x
தினத்தந்தி 21 March 2018 11:49 AM GMT (Updated: 21 March 2018 11:49 AM GMT)

தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி எந்த அளவிற்கும் செல்லும் என மதச்சார்பற்ற ஜனதா தாள் கட்சியின் தலைவர் தேவ கவுடா கூறியுள்ளார். #DeveGowda

புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தில் லிங்காயத் சமூகத்தை தனி மதமாக காங்கிரஸ் அரசு அங்கீகரித்து உள்ளது. இதன் காரணமாக வீரசைவ - லிங்காயத் சமூகத்தினரிடையே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், “காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற எந்த அளவிற்கும் செல்லும்” என மதச்சார்பற்ற ஜனதா தாள் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா கூறியுள்ளார்.

இது குறித்து கவுடா கூறுகையில், “லிங்காயத் சமூகத்தினருக்கு தனி மதமாக அங்கீகாரம் அளித்துள்ள செய்தி பயனுள்ளதா? இல்லையா? என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு லிங்காயத் சமூகத்தினரின் கோரிக்கையை மறுத்து வந்தது. ஆனால் தற்போது கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த வேளையில், அச்சமூகத்தினருக்கு தனி மத அங்கீகாரம் அளித்துள்ளது. இதிலிருந்து காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற எந்த அளவிற்கும் செல்லும் என்பது தெளிவாக தெரிகிறது. 

மேலும் வரும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கட்சியுடன், மதச்சார்பற்ற ஜனதா தாள் கட்சி கைகோர்த்து போட்டியிடும்” எனக் கூறினார்.


Next Story