அமளி காரணமாக 6-வது நாளாக நிராகரிக்கப் பட்ட நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ்


அமளி காரணமாக 6-வது நாளாக நிராகரிக்கப் பட்ட நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ்
x
தினத்தந்தி 23 March 2018 7:29 AM GMT (Updated: 23 March 2018 11:42 AM GMT)

பாராளுமன்ரத்தில் தொடர் அமளி காரணமாக இன்றும் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் எடுக்கவில்லை. #NoCofidenceMotion

புதுடெல்லி,

கடந்த 5-ம் தேதி கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம், காவிரி மேலாண்மை வாரியம், வங்கி மோசடி ஆகிய விவகாரங்களில் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான நேரம் அவை முடங்கியது.

15-வது நாளான இன்று மாநிலங்களவையில் ஆந்திர எம்.பி.க்கள் பதாகைகளுடன் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த துணை ஜனாதிபதி எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து, மாநிலங்களவை  வரும் திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை வரும் செவ்வாய் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆந்திர எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், அவை ஒழுங்காக நடக்காததால் நோட்டீஸை எடுத்துக்கொள்ள சபாநாயகர் மறுத்து விட்டார்.

கடந்த 6 நாட்களாக நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story