ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு மூலம் உண்மை வென்றுள்ளது - அரவிந்த கெஜ்ரிவால்


ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு மூலம் உண்மை வென்றுள்ளது -  அரவிந்த கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 23 March 2018 9:49 AM GMT (Updated: 23 March 2018 9:56 AM GMT)

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதிநீக்கம் செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்பு மூலம் உண்மை வென்றுள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #DelhiHC #AamAadmi #AAPMLAs

புதுடெல்லி

இரட்டை பதவி வகித்ததால் இரட்டை ஆதாய பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கு  ஜனாதிபதி  ஒப்புதல் அளித்தார்.  இதை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்  இன்று தீர்ப்பு வழங்கியது  அந்த தீர்ப்பில்   டெல்லியில் 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என தீர்ப்பு வழங்கி உள்ளது.தேர்தல் ஆணையம் 20 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம்  செய்து பரிந்துரைத்ததை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

தீர்ப்பு குறித்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த கெஜ்ரிவால் கூறியதாவது:-

 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதிநீக்கம் செல்லாது என்ற ஐகோர்ட் தீர்ப்பு மூலம் உண்மை வென்றுள்ளது.  எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம். எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தவறான செயல் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Next Story