வளர்ச்சிக்காக இல்லாமல் அரசியலுக்காக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியுள்ளது- அமித்ஷா கடிதம்


வளர்ச்சிக்காக இல்லாமல் அரசியலுக்காக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியுள்ளது- அமித்ஷா கடிதம்
x
தினத்தந்தி 24 March 2018 5:42 AM GMT (Updated: 24 March 2018 5:42 AM GMT)

ஆந்திராவின் வளர்ச்சிக்காக இல்லாமல் அரசியலுக்காக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியுள்ளது என சந்திரபாபு நாயுடுவுக்கு அமித்ஷா கடிதம் எழுதி உள்ளார். #ChandrababuNaidu #AmitShah

புதுடெல்லி

ஆந்திராவுக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்காததை கண்டித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. மத்திய அமைச்சரவையில் தனது கட்சியின் அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்த நிலையில் சந்திரபாபுநாயுடு முடிவு எடுத்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவையில் 16, மாநிலகளவையில் 6 எம்பிக்கள் உள்ளனர்.

இந்த நிலையில் பாரதீய ஜனதா தேசிய தலைவர்  அமித்ஷா சந்திர பாபு நாயுடுவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
 
ஆந்திராவின் வளர்ச்சிக்காக இல்லாமல் அரசியலுக்காக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியுள்ளது  பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது எதிர்பாராதது, ஒருதலை பட்சமானது.என கூறி உள்ளார்.

Next Story