கத்துவா சம்பவம் போல் சூரத்தில் சிறுமி கொலை உடலில் 86 காயங்கள்


கத்துவா சம்பவம் போல் சூரத்தில் சிறுமி கொலை உடலில் 86 காயங்கள்
x
தினத்தந்தி 16 April 2018 5:52 AM GMT (Updated: 16 April 2018 5:52 AM GMT)

கத்துவா சம்பவம் போல் சூரத்தில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். அவர் உடலில் 86 காயங்கள் இருந்து உள்ளன.

சூரத்

காஷ்மீர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தலைவர்கள் இந்த கொடுமையான செயலுக்கு  கண்டனம் தெரிவித்தனர். இதன் தாக்கம் இன்னும், அடங்கும் முன்பே  இதுபோல் மேலும் ஒரு படுபாதக செயல் சூரத்தில் நடந்து உள்ளது.

இது குறித்து சூரத் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சூரத்தில் 10  நாட்களுக்கு முன்  காணமல் போன 11 வயது சிறுமியின் உடல்
நேற்று பண்டேஸ்ரா பகுதி கிரிக்கேட் மைதானம் அருகே   கண்டெடுக்கப்பட்டது. சிறுமி கற்பழிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். சிறுமியின் உடலில் 86 க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்து உள்ளன. கூர்மையான ஆயுதங்களால் அவரது உறுப்பு சேதப்படுத்தப்பட்டு  உள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கைப்படி சிறுமி கொலை செய்யபடுவதற்கு முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என தெரியவந்து உள்ளது.


Next Story