கர்நாடக தேர்தல் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையிலான போட்டியாகும் பா.ஜனதா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு


கர்நாடக தேர்தல் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையிலான போட்டியாகும் பா.ஜனதா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 19 April 2018 2:34 PM GMT (Updated: 19 April 2018 2:34 PM GMT)

கர்நாடக தேர்தல் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையிலான போட்டியாகும் என பா.ஜனதா எம்.எல்.ஏ. பேசியது சர்ச்சையாகி உள்ளது. #BJP #KarnatakaElection


பெங்களூரு,


கர்நாடகாவில் மே மாதம் 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது. தேசியக்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் பெலகாவி பகுதியில் பாரதீய ஜனதா எம்எல்ஏ சஞ்சய் பட்டீல், தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. அதில் கர்நாடக தேர்தல் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையிலான போட்டியாகும் என அவர் கூறிஉள்ளார். 

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை சாலை, குடிநீர் பிரச்சினைகள் தீர்மானிக்கப் போவதில்லை. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் தான் முடிவு செய்யப்போகிறது. ராமர் கோயிலுக்கும், பாபர் மசூதிக்கும் இடையிலான பிரச்சினைகள் தான் தீர்மானிக்கப் போகின்றது. பாரதீய ஜனதா ராமர் கோவில் கட்டுவதற்கு முயற்சிக்கிறது, ஆனால் காங்கிரஸ் பாபர் மசூதியை கட்ட விரும்புகிறது. யாருக்கெல்லாம் பாபர் மசூதி, திப்பு ஜெயந்தி வேண்டுமோ அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கட்டும்.

 யாருக்கெல்லாம் சிவாஜி மன்னரின் ஆட்சி, ராமர் கோயில் வேண்டுமோ அவர்கள் பாரதீய ஜனதாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசிஉள்ளார் சஞ்சய் பட்டீல். 

 பா.ஜனதா எம்.எல்.ஏ. சஞ்சய் பட்டீலின் சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Next Story