தேசிய செய்திகள்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீா்மானம் நிராகாிப்பு + "||" + Rajya Sabha chairman Venkaiah Naidu rejects Opposition notice to impeach chief justice Dipak Misra

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீா்மானம் நிராகாிப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க  கோரும் தீா்மானம் நிராகாிப்பு
தலைமை நீதிபதியை பதவி நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீசை நிராகரித்தார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு. #DeepakMisra #VenkaiahNaidu
புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக, பாராளுமன்றத்தில்  கண்டன தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ்  முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக, கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது .  

தீபக் மிஸ்ரா, நீதித்துறை நிர்வாகத்தை தவறாக பயன்படுத்துகிறார், சக நீதிபதிகளின் அதிருப்திக்கு ஆளானவர் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளை ஆதாரமாக வைத்து, காங்கிரஸ்  கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி உள்ளது.

இதில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். காங்கிரஸின் இம்முயற்சிக்கு கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் சில எதிர்க்கட்சிகளும் ஆதரவு தராது என்றும் கூறப்படுகிறது.  

இந்த நிலையில்  தலைமை நீதிபதியை பதவி நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீசை நிராகரித்தார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு சட்ட வல்லுநர்களின் பரிந்துரையை ஏற்று பதவி நீக்க தீர்மானத்திற்கான நோட்டீஸ் நிராகரித்து உள்ளார்.  தீர்மான விவரங்களை முன்கூட்டியே தெரிவித்தது தவறு என நிபுணர்கள் கூறி உள்ளனர்.

மாநிலங்களவை செயலகம் சற்று நேரத்தில் அதிகார பூர்வ் ஆறிவிப்பை வெளியிடுகிறது. 

தலைமை நீதிபதியாக  தீபக் மிஸ்ரா, 1953–ம் ஆண்டு அக்டோபர் 3–ந் தேதி பிறந்தவர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். 1977–ம் ஆண்டு, பிப்ரவரி 14–ந் தேதி தன்னை ஒரு வக்கீலாக பதிவு செய்து கொண்டார். அரசியல் சாசனம், சிவில், கிரிமினல், வருவாய், பணிகள், விற்பனை வரி என பல துறை வழக்குகளிலும் ஒடிசா ஐகோர்ட்டில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.

1996–ம் ஆண்டு, ஜனவரி 17–ந் தேதி ஒடிசா ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு, மத்திய பிரதேச ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 1997–ம் ஆண்டு, டிசம்பர் 19–ந் தேதி நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2009–ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 23–ந் தேதி பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆனார். 2010–ம் ஆண்டு, மே மாதம் 24–ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.

2011–ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 10–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இப்போது கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவர் ‘மக்கள் நீதிபதி’ என்ற சிறப்பு பெயரைப் பெற்றவர் ஆவார்.

1993–ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், மரண தண்டனை நிறைவேற்றுவதை எதிர்த்து யாகூப் மேமன் தாக்கல் செய்த மனுவை அவசர மனுவாக 2013–ம் ஆண்டு ஜூலை மாதம் நள்ளிரவுக்கு பின்னர் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் அமர்வில் நீதிபதி தீபக் மிஸ்ரா இடம் பெற்றிருந்தார். அதிகாலை 5 மணிக்கு, ‘‘யாகூப் மேமன் மரண தண்டனையை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்டுள்ள மரண கட்டளையை நிறுத்தி வைத்தால் அது நீதியை பரிகாசம் செய்வது போலாகும். அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என அறிவித்தது நீதிபதி தீபக் மிஸ்ராதான். அடுத்த 2 மணி நேரத்தில் யாகூப் மேமன் தூக்கில் போடப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.