தேர்தல் ஆணையத்திற்கு தனி செயலகம் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு


தேர்தல் ஆணையத்திற்கு தனி செயலகம் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 April 2018 10:17 AM GMT (Updated: 25 April 2018 10:17 AM GMT)

தேர்தல் ஆணையத்திற்கு தனி செயலகம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. #ElectionCommission #supremecourt

புதுடெல்லி,

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் விதிமுறைகளை வகுக்கும் அதிகாரம், இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட வேண்டும்; மக்களவை, மாநிலங்களவைக்கு தனிச் செயலகம் இருப்பது போல தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் தனி செயலகத்தை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், தனி செயலகம் உருவாக்கப்பட வேண்டும், தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் சுதந்திரம் அளிக்கும் வகையில், பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்தது.  இந்த நிலையில், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு,  தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தனி செயலகம் போன்ற சிறப்பு அம்சங்களை வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளது. 

Next Story