உ.பி. ரயில் மோதி 13 மாணவர்கள் பலி: ஆளில்லா லெவல் கிராசிங்கை அகற்ற முயற்சி செய்து வருகிறோம் ரெயில்வே வாரியத்தலைவர் பேட்டி


உ.பி. ரயில் மோதி 13 மாணவர்கள் பலி: ஆளில்லா லெவல் கிராசிங்கை அகற்ற முயற்சி செய்து வருகிறோம் ரெயில்வே வாரியத்தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 26 April 2018 7:54 AM GMT (Updated: 26 April 2018 7:54 AM GMT)

ஆளில்லா லெவல் கிராசிங்கை அகற்ற முயற்சி செய்து வருகிறோம் என்று ரெயில்வே வாரியத்தலைவர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி மாணவர்கள் பயணம் செய்த வாகனம் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது அந்த வழித்தடத்தில் வேகமாக வந்த ரெயில், பள்ளி வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் இருந்த 13 மாணவர்கள் உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 

இந்த விபத்து குறித்து  டெல்லியில் ரயில்வே வாரிய தலைவர் அஸ்வனி லோகானி கூறுகையில்,

நாங்கள் ஆளில்லா லெவல் கிராசிங்கை அகற்ற முயற்சி செய்து வருகிறோம். அடிப்படையில்,  பொதுமக்கள்  ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயலும் போது கவனமாக இருக்க வேண்டும். அதற்கான மாற்று அங்கு இல்லை.  அலட்சியத்தால் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. 

என பதிலளித்தார்.

Next Story