பாஜக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வெறுக்கத்தக்க பேச்சு வழக்குகளை எதிர்க்கொள்வதில் முதல் இடம் : ஏ.டி.ஆர் அறிக்கை


பாஜக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வெறுக்கத்தக்க பேச்சு வழக்குகளை எதிர்க்கொள்வதில் முதல் இடம் : ஏ.டி.ஆர் அறிக்கை
x
தினத்தந்தி 26 April 2018 8:42 AM GMT (Updated: 26 April 2018 8:42 AM GMT)

பாஜக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளில் முதல் இடம் வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. #BJP

புதுடெல்லி,

ஜனநாயக சீர்த்திருத்தத்திற்கான சங்கம் மேற்கொண்ட ஆய்வில் 15 எம்.பிக்கள் மற்றும் 43 எம்.எல்.ஏக்கள் என பதவியில் உள்ள 85 பேர் வெறுப்புணர்வை தூண்டும் வழக்குகளில் சிக்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.  சமுதாயத்தில் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கருத்துகளை வெளியிட்டு வரும் அரசியல்வாதிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.  

இந்த வழக்குகளில் பாஜக-வை சேர்ந்தவர்கள் முதல் இடத்தில் உள்ளார்கள். அந்த கட்சியை சேர்ந்த 10 எம்.பிக்கள் உள்பட 27 பேர் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனை தவிா்த்து அனைத்து இந்திய மஜ்லிஸ் கட்சி மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகள் தலா 6, தெலுங்கு தேசம், சிவசேனா தலா 3, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளத்தைச் சோ்ந்த தலா 2 பேரும் பாட்டாளி மக்கள் கட்சி,  இந்த வழக்குகளில் சிக்கி உள்ளனா். 

தெலுங்கனாவில் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளில் 13 எம்.எல்.ஏக்களும்,  குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்து ஒரு எம்.எல்.ஏ.க்கு எதிரான வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

Next Story