காங்கிரஸ் கட்சி தார்மீக அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்


காங்கிரஸ் கட்சி தார்மீக அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்
x
தினத்தந்தி 26 April 2018 9:50 AM GMT (Updated: 26 April 2018 9:50 AM GMT)

காங்கிரஸ் கட்சி தார்மீக அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். #RaviShankarPrasad

புதுடெல்லி,

நீதிபதிகள் நியமனம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு ‘கொலிஜியம்’ செய்யும் சிபாரிசுகளை நிராகரிப்பதாக மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக, தலைமை நீதிபதியையும் சில மூத்த நீதிபதிகள் விமர்சித்து வருகிறார்கள். மேலும் மத்திய அரசின் தலையீட்டால் இந்திய நீதித்துறையே ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில், அடக்குமுறைக்கு எதிராக நீதித்துறை குரல் எழுப்பாவிட்டால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படும் எனக்கூறினார்.

இந்த நிலையில், இதற்கு பதில் அளித்த மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்,

காங்கிரஸ் கட்சி தார்மீக அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை அல்லது நீதித் துறையின் கண்ணியத்தைப் பற்றி எங்களை கேள்விகளை கேட்கிறது.
காங்கிரஸ் கட்சியின் முழு பதிவும் நீதித்துறை சமசரத்திற்கு உட்படவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்துக்கொண்டிருக்கிறது. காங்கிஸ் ஆட்சி வரலாற்றில், நீதித்துறை பல முறை அடக்குமுறைக்கு உள்ளானது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story