கர்நாடக பாஜகவைச் சேர்ந்த சந்திரசேகர் ஹீர்மாத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்


கர்நாடக பாஜகவைச் சேர்ந்த சந்திரசேகர் ஹீர்மாத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
x
தினத்தந்தி 26 April 2018 10:56 AM GMT (Updated: 26 April 2018 10:56 AM GMT)

கர்நாடக மாநில பாஜகவைச் சேர்ந்த சந்திரசேகர் ஹீர்மாத் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பெங்களூர்,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. இந்த ஆட்சியின் 5 ஆண்டுகள் பதவி காலம் அடுத்த மாதம்(மே) 28-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தல் முடிவுகள் மே 15-ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்தநிலையில், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பாஜகவைச் சேர்ந்த  சந்திரசேகர் ஹீர்மாத் சந்தித்து பேசினார். அப்போது பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ்சில் இணைவதாக தெரிவித்தார்.  சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சந்திரசேகர் ஹீர்மாத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது பாஜகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story