தேசிய செய்திகள்

ஒடிசாவில் 5 வயது சிறுமியை கற்பழித்த 2 சிறுவர்கள் கைது + "||" + 5-year-old girl raped by two minors in Odisha

ஒடிசாவில் 5 வயது சிறுமியை கற்பழித்த 2 சிறுவர்கள் கைது

ஒடிசாவில் 5 வயது சிறுமியை கற்பழித்த 2 சிறுவர்கள் கைது
ஒடிசாவில் 5 வயது சிறுமியை கற்பழித்த 2 சிறுவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜகத்சிங்பூர், 

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில், கன்டபல்லபபூர் என்கிற பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

கோடை விடுமுறை என்பதால் அந்த சிறுமி நேற்று முன்தினம் வீதியில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது சிறுமிக்கு பழக்கமுடைய 10 மற்றும் 14 வயதான 2 சிறுவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் குளிர்பானம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை அருகில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்று கற்பழித்தனர்.

இதுபற்றி தெரியவந்ததும், சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் சிறுவர்கள் 2 பேரையும், அந்த சிறுமியையும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.