விவசாயிகள் தற்கொலை உலகளாவிய பிரச்சனையாக உள்ளது மத்திய பிரதேச மந்திரி


விவசாயிகள் தற்கொலை உலகளாவிய பிரச்சனையாக உள்ளது மத்திய பிரதேச மந்திரி
x
தினத்தந்தி 29 April 2018 6:03 AM GMT (Updated: 29 April 2018 6:03 AM GMT)

விவசாயிகள் தற்கொலை அது ஒரு ஒரு உலகளாவிய பிரச்சனையாக உள்ளது என்று மத்திய பிரதேச மந்திரி பாலகிருஷ்ணா பாடிதார் கூறியுள்ளார். #farmersuicide

போபால்,

மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.க. தலைவர்கள் இப்போதே நடவடிக்கைகளை தொடங்கி விட்டனர்.

இந்தநிலையில் மார்ச் 20-ம் தேதி பாராளுமன்றத்தில் மத்திய வேளாண் துறை மந்திரி புருஷோத்தம் ரூபாலா மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் தற்கொலை 21 சதவீதமாக உயர்ந்துள்ளது என கூறிப்பிட்டார். இதற்கு மாநில மந்திரி பாலகிருஷ்ணா பாடிதார் செய்தியார்கள் கேள்வி எழுப்பினர் அப்போது அவர் கூறுகையில்,

விவசாயிகள் தற்கொலைக்கு பின்னால் காரணங்கள் மட்டுமே யூகிக்க முடியும், உறுதியாக கூறமுடியாது. 

தற்கொலை செய்து கொள்ளாதவர் யார்? தொழிலதிபர் தற்கொலை செய்து கொள்கிறார், போலீஸ் கமிஷனர் தற்கொலை செய்து கொள்கிறார்.இது ஒரு உலகளாவிய பிரச்சனையாகும். தற்கொலை செய்வதற்கான காரணம் தற்கொலை செய்துகொள்பவருக்கு மட்டுமே தெரியும். நாம் வெறும் யூகங்களை மட்டுமே கூற முடியும்.  இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை குறிப்பாக நாட்டின் கவலை மற்றும் விவாத பொருளாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story