தண்ணீரை சேமிக்க நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை


தண்ணீரை சேமிக்க நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்  மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
x
தினத்தந்தி 29 April 2018 10:52 AM GMT (Updated: 29 April 2018 10:52 AM GMT)

தண்ணீரை சேமிக்க நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். #MannKiBaat #PMModi

புதுடெல்லி,

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுகிழமையில் நடைபெறும் மன் கி பாத் நிகழ்சி ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையான (29-ம்தேதி) இன்று நடைபெற்றது. வானொலி மூலம் காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அம்பேத்கார் குறித்து  நினைவு கூர்ந்தார்.  அம்பேத்கார் வாழ்க்கை புத்தரால் பெரிதும் கவர்ந்தாக கூறினார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரை வருமாறு:

காமன்வெல்த் போட்டியில், இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நமது வீரர்கள் விளையாடி தங்கத்திற்கு மேல் தங்கம் வாங்கி குவித்துள்ளனர்.  அவர்கள் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்.

நாளை புத்த பூர்ணிமா தினத்தை கொண்டாடுவதை முன்னிட்டு  1998 ஆம் ஆண்டு மே 11-ம் தேதி , இந்தியாவின் மேற்குப் பகுதியில், ராஜஸ்தானில் போக்ரான் நகரில் அணுசக்தி பரிசோதனை நடத்தப்பட்டது.  போக்ரான் -2 அணு சோதனை 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்டது.  புத்தர் பூர்ணிமாவின் ஆசிகளுடன் புத்தர் பூர்ணிமா மீது இந்த சோதனை நடத்தப்பட்டது. 

போக்ரான் -2 அணு சோதனை இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் அதன் வலிமையை நிரூபித்தது. இந்தியா  வரலாற்றில் அதன் இராணுவ சக்தியின் ஒரு மைல் கல்லாக இன்றுவரை பொறிக்கப்பட்டுள்ளது என்றே  நாம் சொல்லலாம். 

அதனை தொடர்ந்து, உடல் தகுதி குறித்து எனக்கு அதிகமான கடிதங்கள் மற்றும் அலோசனைகள் வந்துள்ளது. இதனை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. அனைவரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  உடல்நலத்துடன் இருக்க யோகா முக்கியமாக உள்ளது. 

தேர்வு முடிந்து விடுமுறையில் உள்ள இளைஞர்கள் மத்திய அரசு அளிக்கும் பயிற்சியில் சேர வேண்டும். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 

வெயில் காலத்தில் தண்ணீர் தேவை அதிகரிப்ப் அதிகம், இந்த சமயத்தில் நீர் வீணாவதை தடுத்து, சேமிக்க வேண்டும். தண்ணீரை சேமிக்க நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு ஒவ்வொரு சொட்டு நீரையும் வீணாக்காமல் சேமிக்க வேண்டும். நீரை சேமிப்பது குறித்து நமது முன்னோர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.    நீர் சேமிப்பு மற்றும் மேலாண்மைக்காக மத்திய அரசு சராசரியாக சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது. தண்ணீரை  சேமிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது.

ரம்ஜான் மாதம் வர உள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கு மோடி ரம்ஜான் வாழ்த்து கூறினார். ரம்ஜான் நோன்பு மூலம் மற்றவர்களுடைய பசி, தாகம் குறித்து புரிதல் அதிகரிக்கிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Next Story