இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சுதாகர்ரெட்டி 3-வது முறையாக தேர்வு


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சுதாகர்ரெட்டி 3-வது முறையாக தேர்வு
x
தினத்தந்தி 29 April 2018 11:29 AM GMT (Updated: 2018-04-29T16:59:46+05:30)

கேரள மாநிலத்தில் நடைப்பெற்ற கட்சி மாநாட்டில் இந்திய கம்யூ. கட்சியின் பொதுச்செயலாளராக சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளாா். #SudhakarReddy

கொல்லம்,

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள  கொல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது தேசிய மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாடு ஐந்து நாட்களாக ஏப்ரல் 25-ம் தேதியில் இருந்து நடைப்பெறு வருகிறது 

இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.  பின்னா் கட்சியின் பொது செயலாளராக சுதாகா் ரெட்டி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.  இப்பதவியில் சுதாகா் ரெட்டி 3-வது முறையாக அங்கம் வகிக்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கட்சியின் மத்திய நிா்வாகக் குழு உறுப்பினா்களாக தமிழகத்தை சோ்ந்த மகேந்திரன், முத்தரசன் மற்றும் சுப்பராயன் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

Next Story