காஷ்மீரில் இளம்பெண் கற்பழிப்பு: மத்திய ரிசர்வ் படை போலீசார் 3 பேர் பணிஇடைநீக்கம்

காஷ்மீரில் இளம்பெண்ணை கற்பழித்த குற்றச்சாட்டில் மத்திய ரிசர்வ் படை போலீசார் 3 பேர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு,
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மண்டி என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண் நேற்று போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 10-ந்தேதி மாலை எனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக டெமானா பகுதியில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது நான் திடீரென பாதையை மறந்துவிட்டேன். அந்த சமயத்தில் காரில் வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 3 பேர் எனக்கு உதவுவதாக கூறினர். அதனை நம்பி அவர்களுடன் சென்றேன். ஆனால் அவர்கள் என்னை அவர்களின் முகாமுக்கு அழைத்துச் சென்று சிறை வைத்தனர். பின்னர் அவர்களில் ஒருவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். உடன் இருந்தவர்கள் அதனை செல்போனில் படம் பிடித்தனர். நான் இது பற்றி போலீசிடமோ அல்லது வேறு யாரிடமோ கூறினால் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டினார்கள்.
இவ்வாறு அவர் தனது புகாரில் கூறி உள்ளார்.
இந்த புகார் தொடர்பாக மத்திய ரிசர்வ் படை போலீ சார் 3 பேர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story