காமன்வெல்த் போட்டிகளின் வெற்றி வீரா்களுக்கு பாராட்டு விழா: ராம்நாத் கோவிந்த்


காமன்வெல்த் போட்டிகளின் வெற்றி வீரா்களுக்கு பாராட்டு விழா:  ராம்நாத் கோவிந்த்
x
தினத்தந்தி 30 April 2018 8:42 AM GMT (Updated: 2018-04-30T14:12:50+05:30)

காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனைவரையும் அழைத்து பாராட்டியுள்ளாா். #CWGwinners #PresidentKovind

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவில்  2018க்கான  காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் பதக்கம் வென்ற  வீரா்களை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  ராஷ்டிரபதி பவனில் அழைத்து சந்தித்துள்ளாா். பின்னா் அவா்களை பெருமை படுத்தும் வகையில் பாராட்டு விழாவும் நடைப்பெற்றது.  

மேலும் காமன் வெல்த் விளையாட்டு திருவிழாவில் இந்தியாவிற்கு  மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. பின்னா் 26 தங்கம் பதக்கமும் , 20 வெள்ளி பதக்கமும் , 20 வெண்கல பதக்கமும் ஆகியவை  பெற்று மொத்தம் 66 பதக்களை இந்திய  வீரா்கள்  பெற்றதையும் பெருமைப்படுத்தினா்.

இந்நிலையில் முன்னதாக  நடந்த  டெல்லி காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 101 பதக்கங்களை வென்றதையும் , 2002 மெல்போர்ன் விளையாட்டுகளில் 69 பதக்கங்களை பெற்றதையும் அறிவுறுத்தினா்.

Next Story