ஜனார்தன் ரெட்டி பெல்லாரியில் நுழைய அனுமதி மறுப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ஜனார்தன் ரெட்டி பெல்லாரியில் நுழைய அனுமதி மறுப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 May 2018 10:30 PM GMT (Updated: 4 May 2018 8:01 PM GMT)

பா.ஜனதாவை சேர்ந்த ஜனார்தன் ரெட்டியை பெல்லாரியில் நுழைய அனுமதி மறுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் ஆந்திராவின் அனந்தபூரில் இரும்பு சுரங்கங்கள் மூலம் கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, கர்நாடக முன்னாள் மந்திரியும், பா.ஜனதாவை சேர்ந்தவருமான ஜனார்தன் ரெட்டி கடந்த 2009–ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியான இவருக்கு பெல்லாரி மாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனார்தன் ரெட்டியின் சகோதரர் சோமசேகர் ரெட்டி பா.ஜனதா சார்பில் பெல்லாரியில் போட்டியிடுகிறார். எனவே அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பெல்லாரியில் நுழைய அனுமதிக்க வேண்டும் என ஜனார்தன் ரெட்டி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூ‌ஷண் ஆகியோரை கொண்ட அமர்வு, பெல்லாரியில் நுழைய ஜனார்தன் ரெட்டிக்கு அனுமதி மறுத்ததுடன், அவரது மனுவையும் தள்ளுபடி செய்தது.


Next Story