தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கில் 2 தூக்கு தண்டனை கைதிகளின் மறுஆய்வு மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு + "||" + In the case of nirpaya Deferred judgment on the review petition of 2 convicts

நிர்பயா வழக்கில் 2 தூக்கு தண்டனை கைதிகளின் மறுஆய்வு மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

நிர்பயா வழக்கில் 2 தூக்கு தண்டனை கைதிகளின் மறுஆய்வு மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு
2012–ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ‘நிர்பயா’ கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் டெல்லி விரைவு கோர்ட்டு 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டும் இந்த தண்டனையை  உறுதி செய்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு சிறுவன் 3 ஆண்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தங்கியிருந்து விடுதலை ஆகிவிட்டான். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவனான ராம்சிங் என்பவன் திகார் சிறையில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்டான்.

டெல்லி ஐகோர்ட்டில் குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து கீழ்க்கோர்ட்டு தீர்ப்பை கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் வினய் சர்மா, பவன் குப்தா இருவரும் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூ‌ஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வினய்குமார், பவன்குப்தா ஆகியோர் தரப்பு வாதங்களை கேட்டபிறகு நீதிபதிகள் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.