தேசிய செய்திகள்

உலகின் முதல் மகளிர் சிறப்பு ரெயில் 26 வருடங்களை நிறைவு செய்தது + "||" + 'World's first' women's special train completes 26 years

உலகின் முதல் மகளிர் சிறப்பு ரெயில் 26 வருடங்களை நிறைவு செய்தது

உலகின் முதல் மகளிர் சிறப்பு ரெயில் 26 வருடங்களை நிறைவு செய்தது
சர்ச்கேட் மற்றும் போரிவலி ரெயில் நிலையங்களுக்கு இடையேயான உலகின் முதல் மகளிர் சிறப்பு ரெயில் 26 வருடங்களை இன்று நிறைவு செய்துள்ளது.

மும்பை,

இந்தியாவில் சர்ச்கேட் மற்றும் போரிவலி ரெயில் நிலையங்களுக்கு இடையே முதல் மகளிர் சிறப்பு ரெயில் சேவை கடந்த 1992ம் ஆண்டு மே 5ந்தேதி தொடங்கப்பட்டது.  இது உலகின் முதல் மகளிர் சிறப்பு ரெயில் ஆகும்.

இரு ரெயில் நிலையங்களுக்கு இடையே மகளிருக்காக தொடங்கப்பட்ட இந்த சேவையானது தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 2 முறையே இயக்கப்பட்டு வந்தது.  அதன்பின் நாளொன்றுக்கு 8 முறை என சேவை மேம்படுத்தப்பட்டது.

இந்த சிறப்பு ரெயில் இன்றுடன் 26 வருடங்களை நிறைவு செய்துள்ளது.  சர்ச்கேட் மற்றும் போரிவலி ரெயில் நிலையங்களுக்கு இடைய இயக்கப்பட்டு வந்த இந்த ரெயில் சேவையானது கடந்த 1993ம் ஆண்டு விரார் நகர் வரை நீட்டிக்கப்பட்டது என மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.