எப்போதும் டிவி பார்த்த சிறுமி பேய் பிடித்ததாக அடித்துக்கொன்ற பெண் சாமியார்


எப்போதும் டிவி பார்த்த சிறுமி பேய் பிடித்ததாக அடித்துக்கொன்ற பெண் சாமியார்
x
தினத்தந்தி 5 May 2018 8:16 AM GMT (Updated: 5 May 2018 8:16 AM GMT)

எப்போதும் டிவி பார்த்துக்கொண்டே இருந்த சிறுமியை, பேய் பிடித்ததாகக் கூறி அடித்துக்கொன்றார் பெண் சாமியார். இந்தச் சம்பவம் பெங்க ளூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர்

பெங்களூரில் உள்ள மல்லேஸ்பாலயாவில் உள்ள மாருதிநகரில் வசித்து வருபவர் காயத்ரி. இவரது மகள் சரண்யா. வயது 13. ஒன்பது வகுப்பு செல்ல இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் சரண்யா. ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து தனது மகளை தான் அடித்துக்கொன்றுவிட்டதாக போலீஸில் சரணடைந்தார், காயத்ரி. தனது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து டிவி பார்த்துக்கொண்டே இருந்ததால் கொன்றேன் என்று கூறினார்.

இது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையை தொடர்ந்தனர். அப்போது பல திடுக் தகவல்கள் வெளியாயின  அதாவது, சரண்யா எப்போதும் டிவி பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார். டிவி இல்லை என்றால் மொபைல் போன். படிப்பதும் இல்லை, வீட்டு வேலையும் செய்வதில்லை. இதையடுத்து, ’இந்தப் புள்ள ஏம் இப்படி இருக்கு? என்று தனது அக்காவிடம் கேட்டிருக்கிறார் காயத்ரி. பக்கத்துத் தெருவில் பரிமளா என்பவர் இருக்கிறார். பில்லி சூனியம், பேய், பிசாசு இருந்தால் விரட்டுவார், போய் பார்ப்போம் என்று கூறியுள்ளார் அவர்.

மகளுக்கு பேய்ப் பிடித்திருக்கும் என நினைத்து பரிமளாவிடம் அழைத்து சென்றார் காயத்ரி. பரிமளாவும் அவர் மகள் ரம்யாவும் பேய் விரட்ட பூஜைகள் செய்தனர். பிறகு, பேயே போ போ என்று இரும்பு கம்பியால் கடுமையாகத் தாக்கியுள்ளனர் சரண்யாவை. இருவரும் மாறி மாறி தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர், கதறி அழுது சுருண்டு விழுந்தர். இதைக் கண்ட பரிமளாவுக்கு அதிர்ச்சி. அவளுக்கு ஏதும் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று சுதாரித்து, சாமி வந்தது போல ஆடியிருக்கிறார்.பிறகு, ;உம் பொண்ணுக்கு ஏதும் ஆச்சுன்னா, யார் கேட்டாலும் நீதான் அடிச்சேன்னு சொல்லணும். என்னைய சொல்லக் கூடாது. இது ஆத்தா உத்தரவு  என்று சொன்னாராம்.

சரி என்று தலையாட்டிய காயத்ரி, மகளைத் தூக்கிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசுக்கு சென்று, பரிமளா சொன்னதை கூறியுள்ளார் காயத்ரி. இது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காயத்ரி, பரிமளா, ரம்யா, இவர்களுக்கு உதவிய 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story