தேசிய செய்திகள்

டெல்லியில் இரு வேறு தீ விபத்து சம்பவங்களில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி + "||" + 4, including children, dead in Delhi fire incidents

டெல்லியில் இரு வேறு தீ விபத்து சம்பவங்களில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

டெல்லியில் இரு வேறு தீ விபத்து சம்பவங்களில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி
டெல்லியில் இரு வேறு தீ விபத்து சம்பவங்களில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். #FireAccident

புதுடெல்லி,

டெல்லியின் வடமேற்கே ஆதர்ஷ் நகர் பகுதியில் வீடு ஒன்றில் இருந்த ஏ.சி.யின் கம்பிரசர் வெடித்துள்ளது.  இதனை அடுத்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.  அவர்கள் போராடி ஒரு மணிநேரத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் ஒரு சிறுவன் மற்றும் அவனது சகோதரி என 2 பேர் பலியாகினர்.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் டெல்லியின் தெற்கே கோட்லா முபாரக்பூர் பகுதியில் குடோன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.  இதில் 2 பேர் சிக்கி பலியாகினர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி இரண்டரை மணிநேரத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.