தேசிய செய்திகள்

சுற்றுலா செல்ல வசதியாக நண்பர் வீட்டில் விட்டு சென்ற 4 வயது மகளுக்கு சூடு வைத்து கொடுமை + "||" + Girl tortured with hot iron rod for not eating

சுற்றுலா செல்ல வசதியாக நண்பர் வீட்டில் விட்டு சென்ற 4 வயது மகளுக்கு சூடு வைத்து கொடுமை

சுற்றுலா செல்ல வசதியாக நண்பர் வீட்டில் விட்டு சென்ற 4 வயது மகளுக்கு சூடு வைத்து கொடுமை
ஒடிசாவில் தம்பதி ஒன்று சுற்றுலா செல்ல வசதியாக தங்கள் நண்பர் வீட்டில் விட்டு சென்ற 4 வயது மகளுக்கு இரும்பு தடியால் சூடு வைத்து கொடுமை நடந்துள்ளது.

பெர்ஹாம்பூர்,

ஒடிசாவில் வசித்து வந்த ஒரு தம்பதி கோடை சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர்.  நண்பரின் குழந்தையுடன் தங்களது மகள் விளையாடி கொண்டிருக்கும் என அந்த தம்பதி முடிவு செய்து தங்களது 4 வயது மகளை நண்பர் ஒருவரது வீட்டில் விட்டு விட்டு சுற்றுலாவுக்கு சென்று விட்டனர்.

ஆனால் சுற்றுலா முடிந்து திரும்பி வந்த தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  உணவு சாப்பிட மறுத்ததற்காக சிறுமிக்கு நண்பர் இரும்பு தடியை கொண்டு சூடு வைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி அறிந்த தம்பதி தங்களது மகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  போலீசாரிடம் அளித்த புகாரினை அடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.