தேசிய செய்திகள்

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை செய்வோர் தூக்கிலிடப்பட வேண்டும்; சந்திரபாபு நாயுடு + "||" + Those committing sexual assault against women should be hanged: AP CM

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை செய்வோர் தூக்கிலிடப்பட வேண்டும்; சந்திரபாபு நாயுடு

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை செய்வோர் தூக்கிலிடப்பட வேண்டும்; சந்திரபாபு நாயுடு
பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை செய்வோர் தூக்கிலிடப்பட வேண்டும் என ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

குண்டூர்,

ஆந்திர பிரதேசத்தில் ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரால் 9 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்.  அதன்பின்னர் மற்றொரு கிராமத்தில் வைத்து குற்றவாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுமியை சந்தித்த ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை.  இந்த குற்றங்களை செய்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களது வாழ்வின் இறுதி நாளாக அது இருக்க வேண்டும்.

அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.  நிர்பயா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார்.